Friday, December 11, 2009

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள





"அடுத்தவன  கெடுத்ததில்லை வயுத்துல தான் அடிச்சதில்ல உழைப்ப நம்பி பொழைப்பு நடத்துறேன் "
என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் வாழும் தலைவனே !
உன் கடின உழைப்பினால்  புகழின் உச்சியை அடைந்த போதும் தன்னடக்கத்தின் முழு உருவமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவனே !  உன் நிலையில் மற்றவர்கள் இருந்தால் அவர்கள் செய்யும் அட்டகாசத்தை நினைத்து கூட பார்க்க முடியாது .
உன்னிடம் தான் கற்றுகொள்ள இன்னும் எத்தனை எத்தனை உள்ளது . உன்னிடம் உள்ள அனைத்து நல்ல குணங்களையும் கற்றுகொள்ள  இந்த ஒரு ஜென்மம் போதாது எங்களுக்கு. நீ உயர்ந்தது மட்டும் இன்றி உன்னை நம்பி இருக்கும் அனைவருக்கும் முடிந்த வரை உதவி அவர்களையும் முன்னுக்கு கொண்டு வரும் உன் குணம் யாருக்கு வரும் . நீ எப்போதும் பசியோடு இருப்பவர்களை உணவை கொடுப்பவர் இல்லை மாறாக  அவர்களுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்பவர் . அதனால் அவர்கள் தங்கள் உழைப்பினால்  வாழ கற்றுக்கொள்கின்றனர் . உதவி செய்வது பெரிதில்லை ஆனால் அந்த உதவி  உரியவர்களுக்கு உரிய விதத்தில் இருக்க வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் கற்று கொடுத்து இருக்கிறாய் . உன்னால் இப்போது உன் அன்பு தம்பிகளாகிய ரசிகர்களும் தங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர்களாகி விட்டனர் என்பது இப்போது அவர்கள் செய்து வரும் நல்ல செயல்களினால் புலனாகிறது.

உன்னால்  கெட்டவர்கள் யாரும் இல்லை இந்த உலகில் ஆனால் வாழ்ந்தவர்கள் கோடான கோடி .

உன்னை இகழ்பவரையும் "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " என்னும் குறளுக்கேற்ப  உன் அன்பினால் மற்றுபவனே !

கெட்டவர்களுக்கு பொல்லாதவனாகவும ,  நல்லவனுக்கு நல்லவனாகவும் , தர்மத்தின் தலைவனாகவும் ,  எங்களுக்கு கிடைத்த அரிய  முத்தே !  எங்கள் அனைவருக்கும் ஆன்மிகத்தின் சக்தியை உணர வாய்த்த அருணாச்சலமே , படையப்பாவே ,  ராகவேந்திரரே  !

நீ நீண்ட நாள் நலமுடனும் சந்தோசத்துடனும்,  நிம்மதியுடனும் (சந்தோசத்திற்கும் நிம்மதிக்கும் தான் வித்தியாசத்தை எங்களுக்கு கற்று கொடுத்து விட்டாயே )  வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு உன் கோடானு கோடி அன்பு ரசிகர்களில் ஒருவன் .

Thursday, September 24, 2009

Beginning a new journey to express my feelings

எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது . உடனே ஆரம்பித்து விட்டேன் இந்த blog.

என் மனதில் தோன்றும் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதை பயன் படுத்துவேன் . என்றும் உங்கள் ஆதரவை நாடும் ,

ரோபோ .